Welcome to our
Tamil Congregation page
Service Timing:
Every Sunday from 8:15am
TAMIL SERVICE OF OCBC:
The people of the Tamil Service of Otahuhu Community Baptist Church are a bunch of vibrant, colourful and active members. This group has been in existence since May 1999. The Tamil Service members have immigrated to New Zealand from different parts of India and also the world. The majority of them are Tamil speaking and a few of them are non-Tamil speaking, but they do understand Tamil to an extent. Some do try to learn and understand the language. Hence to cater everybody, we have our services both in Tamil and English.
ஒட்டாஹூஹூ சமூக பாப்திஸ்து திருச்சபையை சேர்ந்த தமிழ் பேசும் அங்கத்தினர்கள் மிகவும் கனிவான, துடிப்பான மற்றும் சேவை மனப்பான்மை நிறைந்த அருமையான தேவ ஜனம். இந்த ஆண்டவரின் குடும்பமானது 1999 ஆண்டில் இருந்து ஊழியம் செய்து வருகிறது. இந்திய தேசம் மற்றும் உலகத்தின் சில பகுதிகளில் இருந்து நியூசிலாந்து தேசத்திற்கு குடியேற்றம் செய்து வந்த தமிழ் பேசும் அங்கத்தினர்கள் இதை நடத்தி வருகின்றனர். சரளமாக தமிழ் எழுத படிக்க அறிந்த பலரும் ஓரளவுக்கு விளங்கிக்கொள்ளக்கூடிய அளவுக்கு சிலரும் இங்கே உள்ளனர். அனைவரும் தமிழ் மொழியை முழுவதுமாக விளங்கிக்கொள்ள முடியாத காரணத்தினால் ஆராதனை தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து காணப்படும்.
வெவ்வேறு சபை கட்டமைப்புகள், வெவ்வேறு வழிபாட்டு முறைகள் மற்றும் பல பின்புலங்களை கொண்டு வந்தவர்கள் இங்கே சங்கமித்தாலும் அனைவரும் ஒற்றுமையாக ஒரு குடும்பத்தை போலவே ஐக்கியம் கொண்டிருப்பது எங்களின் சிறந்த குணாதிசயம். துவக்க காலகட்டங்களில் பெரிய சவால்களை சந்தித்த நாங்கள் கர்த்தரின் வழிநடத்துதல் மற்றும் அவரின் தயவால் தடைகளை தாண்டி இன்று உறுதியாக வளர்ந்து வருகிறோம். ‘ஆதலால் ஒரு அவயம் பாடுபட்டால் எல்லா அவயங்களும் கூட பாடுபடும். ஒரு அவயம் மகிமைப்பட்டால் எல்லா அவயங்களும் கூட சந்தோஷப்படும் என்று 1 கொரிந்தியர் 12 : 26 இல் காணப்படும் வசனத்தை நடைமுறையில் செயல்படுத்த கர்த்தர் கிருபை செய்து வருகிறார். இங்கே ஒருவருக்கொருவர் காண்பிக்கும் அன்பை கண்டு நாங்கள் பெருமிதம் கொள்ளுகிற அதே வேளையில் தேவனுக்கு முன்பாக எங்களை மிகவும் தாழ்த்துகிறோம். ஒரு பெரிய குடும்பமாக இதுவரை வளர்ந்து வந்த நாங்கள் இன்னும் கிறிஸ்துவுக்குள் அதிகமாக வளர கர்த்தரின் கிருபையையே நாடி இருக்கிறோம்.
எங்கள் சபையில் குறிப்பிடத்தக்க அருமையான காரியம் பாடல் ஆராதனை நேரம். தேவ கிருபையால் எங்கள் சபையில் திறமை வாய்ந்த, தாலந்துகள் நிறைந்த, பொறுப்புள்ள பாடல் இசை ஆராதனை குழுவினர் உள்ளனர். எந்த ஒரு அங்கத்தினரையும் ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை மூலமாக தேவனோடு இணைக்கும் ஒரு ஆசிர்வாதத்தை இவர்கள் பெற்றுள்ளார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சபையில் நடைபெறும் அணைத்து விதமான ஊழியங்களிலும் எல்லா அங்கத்தினர்களும் மகிழ்ச்சியோடு கலந்து கொள்ளுகிறார்கள். ஜெப கூடுகைகள், வேத ஆராய்ச்சி வகுப்புகள், உபவாச ஜெபங்கள், முழு இரவு ஜெபங்கள், சிறுவர் ஊழியங்கள் மற்றும் சுவிசேஷ ஊழியங்கள் என்று பல்வேறு ஊழியங்கள் நடைபெறுகின்றன. இதற்கு மேலாக ஆண்டுதோறும் நடைபெறும் விசேஷ மூன்று நாள் முகாம் மற்றும் ஒரு நாள் சுற்றுலா நாங்கள் மிகவும் விரும்பும் நிகழ்ச்சிகள். நாங்கள் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் அன்றாட ஜெபமாக உள்ளது.
நண்பரே, ஒருவேளை இதை நீங்கள் வாசித்து கொண்டு இருந்தால் உங்களுக்காக நாங்கள் ஏற்கனவே ஜெபித்துவிட்டோம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள நாங்கள் வாஞ்சிக்கிறோம்.
தேவன் தாமே உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக!
மிகவும் நன்றி
பாஸ்டர் தாஸ்